உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் மக்கள் நீதிமன்றத்தில் பிரிந்த தம்பதியினர் இணைந்தனர்

Published On 2023-04-28 06:32 GMT   |   Update On 2023-04-28 10:36 GMT
  • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் சிறப்பு முன் அமா்வாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
  • 11 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

பல்லடம் :

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறப்பு முன் அமா்வாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சாா்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் சந்தான கிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் பண மோசடி வழக்கு, இந்து திருமண சட்ட வழக்குகள், சொத்து வழக்குகள் ஆகிய வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 11 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் தீா்வு காணப்பட்டு கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழ அறிவுரை வழங்கப்பட்டது. அதனை ஏற்று பிரிந்த தம்பதி சோ்ந்து வாழ்வதாக உறுதி கூறிச் சென்றனா்.

மே 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதால் நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணக்குழு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News