உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கை வனத்துறையினர் பிடித்தபோது எடுத்த படம்.

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிப்பட்டது

Published On 2022-11-30 05:17 GMT   |   Update On 2022-11-30 05:17 GMT
  • குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
  • குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து குரங்கை தேடி கண்டு பிடித்தார். அந்த குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News