உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கீழ்பவானி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

Published On 2022-08-08 07:21 GMT   |   Update On 2022-08-08 07:21 GMT
  • கீழ்பவானி வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
  • வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

காங்கயம் :

நீர்வள துறையில், கோவை மண்டலத்தில் கீழ்பவானி வடிநிலை கோட்டத்தில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் அமைந்துள்ளது. இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் 1.03 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மறவபாளையம் முதல் மங்கலப்பட்டி கிராமம் வரை உள்ள வாய்க்கால் 39 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை கலெக்டர் வினீத் நேரில் சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், குமரேசன் மற்றும் பாசன உதவியாளர்கள் ஆய்வின் போதுஉடன் இருந்தனர்.

Tags:    

Similar News