உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Published On 2023-09-10 07:28 GMT   |   Update On 2023-09-10 07:28 GMT
  • வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்
  • தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது.

திருப்பூர் : 

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ராக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கம் மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி கடந்த 2021 முதல் செயல்படுகிறது. 200 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் தவறான, அநாகரீகமான நடத்தை, மிரட்டல், தவறான கட்டுப்பாடுகளை விதித்தல், ஒருவரை மன, உடல் ரீதியாக, வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்,விடுதியில் தங்க முடியாது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்படலாம், தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது.

தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது. போலீசார் மூலம், கிரிமினல் நடவடிக்கை மற்றும் வழக்கு பதியப்படும். கல்லூரியில் ராக்கிங் வேண்டாம் என்று சொல்லுங்கள், ராக்கிங் தண்டனைக்குரிய குற்றம். ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள். மேலும் விதிமுறைகளுக்கு www.ugu.ac.in என்ற இணையதளத்தை பாருங்கள். ராக்கிங் நடந்தால் புகார் தெரிவியுங்கள். போலீசாரின் உதவியை நாடுங்கள், என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News