உள்ளூர் செய்திகள்
உடைந்து காணப்படும் டைல்ஸ் கற்கள்.
பல்லடம் அருகே அங்கன்வாடி பள்ளியில் டைல்ஸ் கற்கள் உடைந்து விரிசல்
- உடைந்த கற்கள் குழந்தைகளின் காலில் பட்டு காயம் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
- இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி தரையில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் உடைந்தும், விரிசல் விட்டும் உள்ளன. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு அவதியாக உள்ளது.
மேலும் உடைந்த கற்கள் குழந்தைகளின் காலில் பட்டு காயம் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. தற்காலிக ஏற்பாடாக உடைந்த டைல்ஸ் கற்களின் மீது சாக்கு போட்டு மூடி உள்ளனர். குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காயம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து டைல்ஸ் கற்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.