உள்ளூர் செய்திகள்
சாலை அருகே வெட்டப்பட்டுள்ள மரக்கிளைகள்.
அவினாசியில் மரக்கிளைகளை வெட்டுபவர்கள் மீது சமூக ஆர்வலர்கள் புகார்
- பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.
அவினாசி:
அவினாசி வ.வு.ச.,காலனி பகுதியில் செங்காடு திடல் உள்ளது. இங்கு அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சிலர் மரக்கிளைகளை வெட்டி சென்று விடுவதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பெரிய மரத்தின் கிளைகளை யாரோ சிலர் வெட்டியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.