உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம் அறிவிப்பு

Published On 2023-08-13 05:47 GMT   |   Update On 2023-08-13 05:47 GMT
  • லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  • கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News