உள்ளூர் செய்திகள்

தனபால் எம்.எல்.ஏ., 

அவினாசி கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - தனபால் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Published On 2023-05-27 06:48 GMT   |   Update On 2023-05-27 06:48 GMT
  • 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
  • பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி- அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22ந் தேதி இரவு புகுந்த நபர் அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தி கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எரிந்துள்ளார்.

இதுகுறித்து அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.ப தனபால் கண்டன அறிக்கையில் கூறியதாவது:-

கோவிலுக்குள் ஒரு நபர் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பூஜை பொருட்களை தூக்கி எறிந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தொகுதிக்குட்பட்ட,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,சம்பவத்தன்று இரவு சமூக விரோதிகளால் 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வலியுறுத்துகிறேன் .பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.இவ்வாறு எம்.எல்.ஏ.ப.தனபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News