உள்ளூர் செய்திகள்

சுகாதாரத் துறையினர் கோழிக் கடைக்கு சீல் வைத்த போது எடுத்த படம்.

வெள்ளகோவிலில் கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய கோழி கடைக்கு 'சீல்'

Published On 2023-10-04 16:16 IST   |   Update On 2023-10-04 16:16:00 IST
  • கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது
  • கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் கோழிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கோழிக்கழிவுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து பரப்பு மேடு என்ற இடத்தில் கொட்டச் சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து நகராட்சி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி நிர்வாகத்தினரால் கோழிக் கடைகாரருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மட்டும் கடை சீல் வைக்கப்பட்டது.

வெள்ளகோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கடை, வீடுகளுக்கு நேரில் வந்து குப்பை மற்றும் கோழி கழிவுகளை பெற்றுச் செல்கின்றனர். இதை மீறி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கோழிக்கழிவுகளை, குப்பைகளை கொட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News