சாரங்கள் சரிந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.
வெள்ளகோவில் பஸ் நிறுத்தத்தில் சாரங்கள் சரிந்து விழுந்தன
- பயணிகள் அதிக அளவில் அந்த பகுதியில் இல்லாத காரணத்தால் யாரும் விபத்தில் சிக்கவில்லை.
- பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை அமைக்க சாரங்கட்டும் பணி நடைபெற்று வந்தது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போன்று இங்கிருந்து வெளியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் வசதியும் உள்ளது. இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை அமைக்க சாரங்கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு மாலை திடீரென சாரங்கள் சரிந்து விழுந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நாட்கள், விசேஷ தினங்கள் இருப்பினும் பயணிகள் அதிக அளவில் அந்த பகுதியில் இல்லாத காரணத்தால் யாரும் விபத்தில் சிக்கவில்லை. இது குறித்து தகவல்அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் பணியாளர்களை கொண்டு உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.