உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.37 லட்சத்திற்கு தேங்காய், கொப்பரை விற்பனை

Published On 2023-08-06 11:37 IST   |   Update On 2023-08-06 11:37:00 IST
  • தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.
  • ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

இதில் கொப்பரை கிலோ ரூ.58 முதல் ரூ.78 வரைக்கும், தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தமாக ரூ.2.37 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரைகள் விற்பனையானதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

Tags:    

Similar News