உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் பேன்சி கடையில் கொள்ளை

Published On 2023-07-10 12:47 IST   |   Update On 2023-07-10 12:47:00 IST
  • ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
  • கடையின் கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பல்லடம்:

பல்லடம் கடைவீதியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் பகுதி உள்ளது. இங்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன்(வயது 60) பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீடு சென்றார். நேற்று காலை இவரது கடையின் கதவு திறந்து கிடப்பதாக அருகே உள்ள கடைக்காரர், போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாகராஜன் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. கடையில் இருந்த கவரிங் செயின், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நாகராஜன் கூறியதாவது:- ஏற்கனவே கடந்த ஜூன் 24ந்தேதி அன்று, கடையின் முன்புறம் வைத்திருந்த பேன்சி பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டது. இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தேன்.

இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கவரிங் செயின், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒரே கடையில் மீண்டும் திருட்டு நடந்திருப்பது வணிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News