சேதம் அடைந்துள்ள ரேஷன் கடையை படத்தில் காணலாம்.
ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
- நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வெனசப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது கட்டடத்தில் முக்கிய பகுதிகளான பல்வேறு இடங்களில் கம்பிகள் தெரியும் அளவிற்கு கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. கட்டிடத்தின் உட்புறப் பகுதிகளில் மேற்கூரை அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நீர் ஒழுகி உள்ளே வந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இடிந்து விழும் நிலை ஏற்படும். உடனடியாக ரேஷன் கடையை சீரமைக்கும் பணி செய்ய வேண்டும்.
புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் தரப்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.