உள்ளூர் செய்திகள்

சாலையில் இடையூறாக இருந்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

வெள்ளகோவிலில் விளம்பர பதாகைகள் அகற்றம் - அனுமதி வாங்கி வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

Published On 2023-09-27 16:06 IST   |   Update On 2023-09-27 16:06:00 IST
  • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள முறையான அனுமதி பெற வேண்டும்.

வெள்ளகோவில்:

பொதுமக்களின் புகாரின் பேரில் வெள்ளகோவில் நகராட்சி செம்மாண்டம்பாளையம் ரோடு பிரிவில் பொதுமக்களுக்காக இடையூறாக நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைத்தாலோ அல்லது நகராட்சி அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தாலோ நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் முறையான அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News