உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு

Published On 2023-08-31 10:39 GMT   |   Update On 2023-08-31 10:39 GMT
  • கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம் உள்ளது.
  • இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

காங்கயம்:

திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான 14.04 ஏக்கா் நிலம் என மொத்தம் 20.34 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுறுத்தலின்பேரில் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் செயல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் மீட்கப்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

Tags:    

Similar News