உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம்

Published On 2023-01-20 10:28 GMT   |   Update On 2023-01-20 10:28 GMT
முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் பல்லடம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை துணைஇயக்குநர் ராமசாமி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (பொறுப்பு) வெங்கடேசன், நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கவுசல்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்லடம் கால்நடை மருத்துவர் உமாசங்கர் வரவேற்றார். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, நகர மன்ற உறுப்பினர்கள் ராஜசேகர், ஈஸ்வரமூர்த்தி, வசந்தாமணி தங்கவேல், தண்டபாணி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம்,பல்லடம் அரசு மருத்துவர் ரமேஷ் குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News