உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசி பேரூராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு

Published On 2022-08-23 05:48 GMT   |   Update On 2022-08-23 05:48 GMT
  • தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது
  • ஒரு கிலோ உரம் 1 ரூபாய்க்கு வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அவிநாசி :

அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சில மாதங்களாக தொய்வுற்றிருந்த இப்பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

ஒரு கிலோ சலித்தெடுத்த உரம், 5 ரூபாய்க்கும், சலித்தெடுக்காத உரம் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணியை காண்டிராக்டர் பாதியில் கைவிட்டதால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி இங்கு குவிந்துள்ள மக்காத குப்பைகள் முற்றிலும் அகற்றப்படும் பட்சத்தில் வளம் மீட்பு பூங்கா, விரைவில் நலம் பெறும்.அதேநேரம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவங்க வேண் டும் என்ற நோக்கில் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற பேரூராட்சியின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. மக்கள் பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பும் அமலுக்கு வந்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடம் பெறும் என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

Tags:    

Similar News