போலீசார் வாகன சோதனை செய்த காட்சி.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு
- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பூர் :
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவு படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளான கரடிவாவி, மடத்துக்குளம், ஏரகாம்பட்டி, ஒன்பதாறு சோதனை சாவடி ஆகிய சோதனை சாவடிகளின் வழியாக, கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி நடந்தது.
திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை–கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.