உள்ளூர் செய்திகள்

அரிசி ஆலையில் சோதனை செய்த அதிகாரிகளை படத்தில் காணலாம்.

திருப்பூரில் தனியார் அரிசி ஆலையில் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு

Published On 2022-11-08 07:30 GMT   |   Update On 2022-11-08 07:30 GMT
  • தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டைகளை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில் தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

திருப்பூரில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டை களை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழ ங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அரவை ஆலையில் தனி நபர்களின் நெல் அரைத்து கொடுக்கப்படுகிறதா அல்லது அரிசி ஆலையில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறப்பு புலனாய்வுத் துறையின் டிஜிபி ஆபாஸ் குமார் கோவை மண்டல எஸ்.பி பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஈரோடு சரக டிஎஸ்பி சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் இசக்கி, கார்த்தி, போலீசார் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கும் எல்லை மட்டும் ஆலையில் அரவை செய்து அரிசியை பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது. தனிநபர்களின் நெல்லை அரைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென அரிசி ஆலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அரிசி ஆலையில் முறைகேடு கண்டறியப்ப ட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்ததாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News