ஐ.ஜி. பவானீஸ்வரி ஆய்வு மேற்கொண்ட காட்சி.
ஒன்பதாறு சோதனைச்சாவடியில் போலீஸ் ஐ.ஜி. திடீர் ஆய்வு
- ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனச்சரகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- ஐ.ஜி. பவானீஸ்வரிபோலீஸ் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
உடுமலை :
உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனச்சரகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த வாகனங்களை சோதனை இடுவதற்கு ஏதுவாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடியும், சின்னாறு பகுதியில் வனத்துறை சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது.அதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு நாள்தோறும் சுழற்சி முறையில் வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ஒன்பதாறில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.