உள்ளூர் செய்திகள்

பல்லடம் கடைவீதியில் உயர் மின் கோபுர விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து இருக்கும் காட்சி.

பல்லடம் கடைவீதியில் எரியாத உயர்மின் கோபுர விளக்குகளால் பொதுமக்கள் அவதி

Published On 2023-03-04 15:54 IST   |   Update On 2023-03-04 15:54:00 IST
  • ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
  • பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் :

பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதி பல்லடம் நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ரோட்டில் பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது கடந்த பல நாட்களாக எரியாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல நாட்களாக அவைகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அந்த ரோட்டில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News