உள்ளூர் செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயிலில் வளர்மதி பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்த பெண்களை படத்தில் காணலாம்.

வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-04-18 10:25 GMT   |   Update On 2023-04-18 10:25 GMT
  • மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது.
  • வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள்.

 திருப்பூர் :

திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி நடமாடி வருகிறார்கள். வயதானவர்கள், பெண்கள் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது. நேற்று மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருப்பூரில் 102 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

இரவு நேரத்தில் வீட்டில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்–கள். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

Tags:    

Similar News