உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஊத்துக்குளியில் இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-11-23 09:51 GMT   |   Update On 2022-11-23 09:51 GMT
  • கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை
  • போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார்.

 பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் .எஸ் .சில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் 195 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகவே ஊத்துக்குளி ஒன்றிய வருவாய் துறையை கண்டித்து தற்போது காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

இதில் சிபிஐ. புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஜி.ரவி, சிபிஐ. மாவட்ட செயலாளர் பி. பழனிசாமி,சிபிஐ தாலுகா செயலாளர் வி. எஸ்.சரவணன்,மாவட்ட செயலாளர் சின்னசாமி, தாலுகா முன்னாள் செயலாளர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் பி.எஸ். செல்வி, ஆர். சுப்புலட்சுமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ .ஐ. டி. யு .சி. மாவட்ட தலைவர் எம். மோகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் செய்திருந்தது.

Tags:    

Similar News