உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட்டக் காட்சி.

இச்சிப்பட்டி பாலம் அமைக்கும் பணியை ஊராட்சி தலைவர் ஆய்வு

Published On 2023-11-04 16:05 IST   |   Update On 2023-11-04 16:05:00 IST
  • நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர்.
  • சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி ரோசரி கார்டன் என்ற பகுதியில் நீர்வழி பாதையை அடைத்து தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்த இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி நீர்வழிப் பாதையை அடைக்காமல் பாலம் அமைத்து அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து அந்த நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர். இந்த நிலையில் பாலம் அமைக்க, அதற்கான சிமெண்ட் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News