உள்ளூர் செய்திகள்

யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம். 

பல்லடம் அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

Published On 2022-08-23 10:45 GMT   |   Update On 2022-08-23 10:45 GMT
  • நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
  • கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்லடம் :-

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகேஸ்வர சுவாமி, உண்ணாமலை அம்மன், மற்றும் கரிய காளியம்மனுக்கு 9 யாக குண்டம், இதர தெய்வங்களுக்கு 37 யாக குண்டங்கள் என மொத்தம், 46 யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கும்பாபிசேக் பணிகளை விழா கமிட்டியினரும், ஊர் பிரமுகர்களும், நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News