உள்ளூர் செய்திகள்

பியோ தலைவர் சக்திவேல்.

திருப்பூரில் தீபாவளிக்கு பிறகு ஆர்டர்கள் அதிகரிக்கும் - பியோ தலைவர் சக்திவேல் பேச்சு

Published On 2022-10-02 07:08 GMT   |   Update On 2022-10-02 07:09 GMT
  • இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.
  • 6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும்.

திருப்பூர் :

பியோ தலைவர் சக்திவேல் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் அவினாசி அருகே இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், இந்திய ஜவுளி பொருட்களையே அதிகம் விரும்பி வாங்குவதாக ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் போட்டி நாடுகளில் பல்வேறு சவால் இருப்பதால், இந்தியாவுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு, பங்களா தேஷில் இருந்து ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்தியா – ஐரோப்பிய நாடுகளுடனான, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம், தீபாவளிக்கு முன்னதாக ஒப்பந்தமாகும். அதற்கு பிறகு, பங்களாதேஷ் ஆர்டர்கள், இந்தியாவுக்கு வந்துவிடும். அடுத்ததாக, கனடாவுடனும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வா ய்ப்புள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. திருப்பூர் தொழில்துறை பயன்பெறும் வகையில், 'மெகா டெக்ஸ்டைல் பார்க்' உள்ளிட்ட திட்டங்களும் அமலுக்கு வரஇருக்கின்றன.

6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினாலும், வெளிநாட்டு வாடிக்கையா ளரின் ஆதரவாலும், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தில், 25 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். சாதகமான சூழலில் நடக்கும் 48 வது 'நிட்பேர்' கண்காட்சி ஏற்றுமதி வர்த்தகத்தின் திருப்புமுனையாக அமையும்; வர்த்தக வாய்ப்பு 5 சதவீதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில், பிரகாசமான எதிர்காலம் உருவாக இருப்பதால், உற்பத்தி திறனை மேம்படுத்தி, ஏற்றுமதியாளர்களும் தங்களை தயார்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News