கோப்புபடம்.
மானிய கோரிக்கை அறிவிப்புகளால் புதிய தொழில்முனைவோர் அதிகரிக்க வாய்ப்பு
- வியாபாரம் சார்ந்த தொழில் துவங்க முதலீட்டு உச்சவரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் போது 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானிய கோரிக்கை தொழில்முனைவோர் மத்தியில் புதிய நம்பி க்கையை விதைத்துள்ளது.
இதுகுறித்து தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கி ணைப்பாளர் அண்ணாதுரை கூறிய தாவது:- வேலையில்லா இளைஞ ர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யு.ஐ.இ.ஜி.பி.,) வியாபாரம் சார்ந்த தொழில் துவங்க முதலீட்டு உச்சவரம்பு 5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. வழங்க ப்படும் மானிய உச்ச வரம்பும் 3.75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்ப ட்டுள்ளது.பொதுப்பி ரிவினர் 45 வயது வரை, சிறப்பு பிரிவினர் 55 வயது வரை என வயது உச்ச வரம்பும் உயர்த்தப்ப ட்டுள்ளது.
மானிய கோரிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் தமிழகத்தி ல் பின்னலாடை உட்பட பல்வேறு வகை தொழில் துறையில் புதிய தொழில் முனைவோர் அதிகரிக்கும். நகர்ப்புற நிறுவனங்கள், புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் போது 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.இதில் பயன்பெற குறைந்த பட்சம் 10 ஏக்கரில் தொழில் வளாகம் அமைக்க வேண்டும் என இருந்தது.தற்போது 2 ஏக்கர் நிலத்தில் அமைத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகளவில் தொழில் துவங்க வாய்ப்பு ஏற்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.