உள்ளூர் செய்திகள்

மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய காட்சி.

உடுமலையில் ஓணம் கொண்டாட்டம்

Published On 2022-09-09 12:47 IST   |   Update On 2022-09-09 12:47:00 IST
  • மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
  • தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.

உடுமலை :

உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலை அருகில் அமைந்துள்ள செந்தூர் கார்டன் பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

உடுமலை பகுதிகளில் வசிக்கும், கேரள மாநில மக்கள், வீடுகளின் முன் பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து, தீபம் ஏற்றியும், 21 வகையானஉணவுகள் தயாரித்து, இலைகளில் பரிமாறி, மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறியும், பாரம்பரிய விளையாட்டுக்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

Tags:    

Similar News