உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூா் மாநகரில் 12 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

Published On 2023-11-14 16:26 IST   |   Update On 2023-11-14 16:26:00 IST
  • 60 வாா்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது.
  • பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு அதிகமாக இருந்தது

திருப்பூர் : 

திருப்பூா் மாநகரில் உள்ள 60 வாா்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது. இந்தக் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் லாரிகள் மூலமாக அப்புறப்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு அதிகமாக இருந்தது. திருப்பூா் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக 12 டன் பட்டாசுக்குப்பைகள் அதாவது 612 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு நிகழாண்டு குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News