உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் திருப்பூரில் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்கம்

Published On 2023-08-23 07:13 GMT   |   Update On 2023-08-23 07:13 GMT
  • முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
  • தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதியதொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியைப் பன்முக ப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திருப்பூர் கிளை அலுவல கத்தில் (டிஐஐசி.,பில்டிங் , தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர் - 641603) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 21.8.2023 முதல் தொடங்கியது. 1.9.2023 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி .ஐ .ஐ .சி -ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டிமானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை புதிய தொழில்முனைவோர்- தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0421 - 4238567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News