உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

Published On 2023-11-14 16:22 IST   |   Update On 2023-11-14 16:22:00 IST
  • திருப்பூரில் திரையரங்குகளைத் தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை.
  • விடுமுறை நாள்களில் மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் குவிவது வழக்கம்

திருப்பூர் : 

பின்னலாடை நகரான திருப்பூரில் திரையரங்குகளைத் தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை. இதனால் பெரும்பாலானவா்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களில் மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் குவிவது வழக்கம்.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான வடமாநில தொழிலாளா்கள் காலையிலேயே பூங்காவில் குவியத் தொடங்கினா். பூங்காவுக்கு வருகை தந்த தொழிலாளா்கள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனா். குழந்தைகள் ஊஞ்சல், தண்ணீா் படகு, ராட்டினம் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தனா். முன்னதாக பூங்காவில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 10க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Tags:    

Similar News