உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தையில் மூலிகை விற்பனை அமோகமாக நடைபெற்ற  காட்சி. 

உடுமலை உழவர் சந்தையில் மூலிகை விற்பனைக்கு வரவேற்பு

Published On 2023-06-04 13:35 IST   |   Update On 2023-06-04 13:36:00 IST
  • ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர்.
  • மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

உடுமலை:

உடுமலை உழவர் சந்தையில் தினமும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர். இந்த நிலையில் துங்காவியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் கிழங்குகளை விற்பனை செய்து வருகிறார். சோற்றுக்கற்றாழை, நாகதாளி, வல்லாரை, கண்டங்கத்திரிக்காய், ஆகாச கிழங்கு வேலிப்படை த்தாங்காய், பிரண்டை, பொதுவெளான், கோவக்காய் உள்ளிட்ட மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News