உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Published On 2022-11-06 05:22 GMT   |   Update On 2022-11-06 05:22 GMT
  • செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
  • முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது.

திருப்பூர்:

மங்களூருவில் இருந்து கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ெரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.புதன், சனிக்கிழமை தோறும் கர்நாடகமாநிலம், மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு செல்லும்.இந்த ெரயிலில் தற்போது, 22 பெட்டிகள் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.இதே போல், மறுமார்க்கமாக கச்சிக்குடாவில் இருந்து மங்களூருவரும் ரெயிலிலும் ஒருஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜனசதாப்தி ரயில் எட்டியுள்ளது.

முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது. கூடுதலாக இரண்டு பெட்டி சேர்த்து 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கும் ஒரே ெரயில் ஜனசதாப்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News