உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண்மை மாணவர்கள் செயல் விளக்கம் அளித்த காட்சி. 

நிலக்கடலை விளைச்சலை அதிகப்படுத்த வேளாண்மை மாணவர்கள் செயல்விளக்கம்

Published On 2023-02-26 12:38 IST   |   Update On 2023-02-26 12:38:00 IST
  • செயல் விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  • நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேளாண் மாணவர்கள் நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இந்தசெயல்விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில் நிலக்கடலை ரிச் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலக்கடலை ரிச் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ என்னும் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். இதனை நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும். இதனை தெளிப்பதன் மூலம் பயிர்களில் பூ உதிர்தலை கட்டுப்படுத்தலாம். மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News