உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூரில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்கள் மீண்டும் இயக்க வேண்டும் - பொது தொழிலாளர் நல அமைப்பு கோரிக்கை

Published On 2023-03-08 07:08 GMT   |   Update On 2023-03-08 07:09 GMT
  • சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர்.
  • பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

திருப்பூர்:

அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன், கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரிலி ருந்து பெருமாநல்லூர்், பாண்டியன் நகர், நம்பியூர், ஈட்டி வீரம்பாளையம், அப்பியாபாளையம் உட்பட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, திருப்பூரிலிருந்து சுற்றுப்பகுதிகளுக்கு சென்றுகொண்டிருந்த அனைத்து டவுன் பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News