உள்ளூர் செய்திகள்
இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய காட்சி

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி

Published On 2023-10-22 10:52 GMT   |   Update On 2023-10-22 10:52 GMT
  • 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர்.
  • நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் சகோதயா கூட்டமைப்பில் உள்ள 23-க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 250-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் வர்ணிகாஸ்ரீ, மகிமிதா ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்வேதா ஜோடி முதலிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரித்விக் முதலிடம் பெற்றார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் கவுஷிக் குகன் 2-ம் இடம் பெற்றார்.

முன்னதாக தொடக்க விழாவுக்கு ஏ.வி.பி.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் ஜி.பவன்குமார், திருப்பூர் யூரோலைன் ஏற்றுமதி நிறுவன மேலாண்மை இயக்குனர் மெய்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பொருளாளர் லதாகார்த்திகேயன், முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ, ஸ்ரீமுருகன் நிட்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவரும் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News