உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்யலாம்

Published On 2022-09-25 11:42 IST   |   Update On 2022-09-25 11:42:00 IST
  • மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை மண்டல கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.
  • வங்கிக்கடன் பெறவும் வசதி செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவிநாசி:

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் வட்டத்தின் சார்பில் மத்திய திறனாக்க செயலகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கான மின்திறன் மேலாண்மை, மின் சிக்கன மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அவிநாசியில் வழங்கப்பட்டது.அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வரவேற்றார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை மண்டல கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.

ஏற்கனவே இலவச மின்சார விவசாய மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 11கிலோ வாட் சோலார் ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்தால் விவசாயிகள் பயன்படுத்தியது போக எஞ்சிய மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமே ஒரு யூனிட் 2.28 ரூபாய்க்கு பெற்று கொள்ளும்.11 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க 5 லட்சம் ரூபாய் செலவாகும்.அதில் 30 சதவீதம் மாநில அரசு, 30 சதவீதம் மத்திய அரசு மானியமாக வழங்கும். எஞ்சிய 40 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக இருக்கும். வங்கிக்கடன் பெறவும் வசதி செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

Tags:    

Similar News