உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூரில் பரிதாபம் லாரி மோதி காஜா பட்டன் நிறுவன உரிமையாளர் பலி

Published On 2023-11-01 11:05 GMT   |   Update On 2023-11-01 11:05 GMT
  • திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.
  • திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: 

திருப்பூர் மெயின் ரோடு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 52). இவர் கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகே காஜா பட்டன் நிறுவனம் நடத்தி வந்தார். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று இரவு 11 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அருகே நிறுவனம் தொடர்பான வேலையை முடித்துக் கொண்டு டைமண்ட் தியேட்டர் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனைப் பார்த்த லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News