உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பொங்கலையொட்டி நொய்யல் பண்பாட்டு திருவிழா நடத்த முடிவு

Published On 2022-11-12 11:04 IST   |   Update On 2022-11-12 11:04:00 IST
  • கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
  • பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது

திருப்பூர்:

திருப்பூர் மாநகரின் மையப் பகுதியாக நொய்யல் நதி அமைந்துள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவை ஊர் மக்கள் கூடி நடத்தும் திருவிழாவாக நொய்யல் ஆற்றின் கரையில் நடத்த, திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆலோசனை மற்றும் விழாக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. வருகிற ஜனவரி 14, 15-ந் தேதிகளில், இந்த அமைப்பு சார்பில், பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதில், தமிழர்களின் கலைகளாக உள்ள பறையாட்டம், வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், களரி, சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரிய மேளர், தேவராட்டம், கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது. 

Tags:    

Similar News