உள்ளூர் செய்திகள்
பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்ட காட்சி.
"மாலைமலர் செய்தி எதிரொலி" பல்லடத்தில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றம்
- மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
- செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.