உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ.

தொழிலாளர் நல வாரிய ஆலோசனைக்குழு கூட்டம் - செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2022-10-29 12:20 IST   |   Update On 2022-10-29 12:21:00 IST
  • தேசிய அளவில் இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் நிலையான தொழிலாளர் குழு ஆகியவை செயல்படுகின்றன.
  • குழுவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் உள்ளார்.

திருப்பூர்:

அனைத்து தொழிலாளர்களுக்கும், 1947-ம் ஆண்டு தொழிற்தகராறு சட்டத்தின் கீழ் ஏற்படக்கூடிய தொழில் தகராறுகள் மற்றும் பிற தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டது. தேசிய அளவில் இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் நிலையான தொழிலாளர் குழு ஆகியவை செயல்படுகின்றன. இவற்றுக்கு துணை அங்கமாக மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் செயல்படுகிறது. இது மாநிலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு செயல்படும்.

அரசு தரப்பு பிரதிநிதிகள் 5 பேர், வேலையளிப்போர் 6 பேர், தொழிலாளர் பிரதிநிதிகள் 6 பேர் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் அங்கம் வகிப்பார்கள். இந்த குழுவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் உள்ளார். இந்த வாரியத்தின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News