உள்ளூர் செய்திகள்
பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் பாலம் கட்டுமானப்பணி. 

உடுமலையில் பாலம் கட்டுமான பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2023-02-12 07:45 GMT   |   Update On 2023-02-12 07:45 GMT
  • உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
  • பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உடுமலை:

உடுமலை பழனி ரோட்டில் இருந்து ஸ்ரீநகர் பூங்கா அருகே பாலம் கட்டுமானபணி காலதாமதமாவதால் குடியிருப்புகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் சீனிவாசன் நகர், ஸ்ரீநகர். பெரியார் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் மெயின் ரோட்டில் ஓடையன் குறுக்கே புதிதாக பாலம் கட்ட ஒரு மாதத்தின் முன் குழி தோண்டபட்டது. மேலும் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் தோண்டப்பட்ட குழி எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை உடனடியாக துவக்கி விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News