சென்னை ஆர்ப்பாட்டத்தில் உடுமலை வியாபாரிகள் 2ஆயிரம் பேர் பங்கேற்பு - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
- பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை:
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சங்க நிர்வாகிகள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர்பாலநாக மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் குமரன் வரவேற்று பேசினார். பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின் போது 40 விவசாய பொருள்களுக்கு ஒரு சதவீத செஸ்வரி ,அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி முதலியவற்றை ரத்து செய்ய கோரி வரும் 22ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டம் மற்றும் உடுமலை கிளை பகுதிகளில் இருந்து 2000 வியாபாரிகள் சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் உடுமலை நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.