உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை - பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-04-16 13:15 IST   |   Update On 2023-04-16 13:16:00 IST
  • இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
  • சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.

மடத்துக்குளம்:

மடத்துக்குளத்தை சுற்றிலும் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக அளவு உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும், இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மடத்துக்குளம் ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு-திருச்செந்தூர், கோவை-பழநி உள்ளிட்ட பயணிகள் ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இவ்வழித்தடத்தில் கூடுதலாக ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உடுமலை, பழநிக்கு சென்று ரெயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தியும் மடத்துக்குளம் ரெயில் நிலையம் குறித்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் சார்பில் ரெயில்வே மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மடத்துக்குளத்தில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல் பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மடத்துக்குளம் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ெரயில் சேவைகளை செயல்படுத்தினால் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.  

Tags:    

Similar News