உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி

Published On 2022-12-14 12:23 IST   |   Update On 2022-12-14 12:23:00 IST
  • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
  • பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

திருப்பூர்:

திருப்பூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டி.என்.பி.எஸ்.சி., எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கங் லோயர் டிவிசனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டெண்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளில் 4500 பணிக்காலியிடங்களுக்கு 6.12.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 04.1.2023.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.12.2022 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும்மாறும் கூடுதல்விவரங்களுக்கு 0421-2971152 மற்றும் 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News