உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் - கைரேகை பதிவு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்- கைரேகை பதிவு நிகழ்ச்சி

Published On 2023-11-27 10:45 GMT   |   Update On 2023-11-27 10:45 GMT
  • வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

திருப்பூர்: 

நாடு முழுவதும் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய 181 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்து கொண்டு துவக்கி வைத்து கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News