உள்ளூர் செய்திகள்

ரத்ததானம் செய்தவர்களை படத்தில் காணலாம். 

தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரியில் ரத்த தான முகாம் - நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

Published On 2022-11-12 12:18 IST   |   Update On 2022-11-12 12:19:00 IST
  • வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

தாராபுரம்:

தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் , அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ் தலைமை தாங்கினார். முகாமை தாராபுரம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசு வக்கீல் உதயச்சந்திரன், தாராபுரம் அரசு கூடுதல் வக்கீல் இந்துமதி, வக்கீல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு 48 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். முகாமில் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News