உள்ளூர் செய்திகள்

டைபாய்டு காய்ச்சல் அதிகரிப்பு - குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் வேண்டுகோள்

Published On 2022-12-16 06:43 GMT   |   Update On 2022-12-16 06:44 GMT
  • தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.
  • குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

திருப்பூர்:

டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-டைபாய்டு காய்ச்சல் பொதுவாக மழைக்காலத்தில் பரவுகிறது. மாசுபட்ட நீர் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்.டைபாய்டு காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சோர்வு, அதிக காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், மயக்கம், தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.இரு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News