உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

விதிகளை மீறிய 218 வாகன ஓட்டுனர்களுக்கு ரூ. 16 லட்சம் அபராதம்

Published On 2022-10-12 10:47 IST   |   Update On 2022-10-12 10:47:00 IST
  • ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
  • ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்:

சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமரன் உத்தரவின் பேரில், பல்லடம், சின்னக்கரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், காங்கயம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலையம் அருகில், 63 வேலம்பாளையம், ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 9 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 21 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.ஆய்வில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தகுதிச்சான்று இல்லாத 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிகாரிகள் வாகனத்தணிக்கை மேற்கொண்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News