உள்ளூர் செய்திகள்

 தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

பா.ம.க. சார்பில் தியாகிகள் நினைவுதின நிகழ்ச்சி

Published On 2022-09-18 05:01 GMT   |   Update On 2022-09-18 05:01 GMT
  • போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
  • இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

பல்லடம் :

தமிழகத்தில், வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், மணிகண்ணன், எம்.ஏ. நகர் குமார், பிரகாஷ், முன்னவன், நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News